சென்னை: திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரை மற்றும் தாம்பரத்துக்கு இயக்கப்படும் மெமு ரயில் சேவை தலா 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது எனத் திருச்சி கோட்ட ரயில்வே செய்தி தொடர்பாளர் ஆர்.வினோத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வேலூர் மாவட்டம் காட்பாடி யார்டில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், சென்னையில் இருந்து வேலூர் வழியாகத் திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் மெமு ரயில் சேவை மற்றும் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாகத் தாம்பரத்துக்கு இயக்கப்படும் மெமு ரயில் சேவை தலா 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி மாலை 6 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (எண் - 66033) மார்ச் 3, 5, 7 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம் வழியாகத் தாம்பரத்துக்கு தினசரி அதிகாலை 4.30 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் (எண் - 66034) சேவை மார்ச் 4, 6, 8 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலை வழியாக காட்பாடி ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மெமு ரயில் (எண் - 66026) மார்ச் 3, 5, 7 ஆகிய தேதிகளில் வேலூர் கன்டோன்மென்ட் ரயில் நிலையம் வரை இயக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
» குற்றாலம் அருகே பரபரப்பு - ஓடும் காரில் திடீர் தீ விபத்து: 2 பேர் உயிர் தப்பினர்
» தேமுதிக இடம் பெற்ற கூட்டணி 234 தொகுதிகளிலும் வெல்லும்: பிரேமலதா விஜயகாந்த் நம்பிக்கை