தூத்துக்குடி: விளாத்திகுளத்தைச் சேர்ந்த அயன்ராஜ் என்பவரது மகன் தாமரைச் செல்வம் (27). இவர் தனது நண்பர் ஸ்ரீராம் என்பவருடன் கோவில்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் சாலையில் கழுகாசலபுரம் விலக்கு அருகே சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த டிராக்டர் திடீரென திரும்பியது. அப்போது மோட்டார் சைக்கிள், டிராக்டர் மீது மோதியது.
இதில், தாமரைச் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த ஸ்ரீராம் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாலாட்டின்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த தாமரைச் செல்வத்தின் தந்தை அய்யன் ராஜ் விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.