தவெக பெயரில் விஷம கருத்துகளை திணிக்க முயற்சி: பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கண்டனம்

By KU BUREAU

சென்னை: கட்​சி​யின் அதிகாரப்​பூர்​வ​மற்​றவர்கள் மூலம் தவெக பெயரில் விஷம கருத்துகளை திணிப்​பதாக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தொலைக்​காட்சி, செய்தி ஊடகங்​களில் நடைபெறும் விவாத நிகழ்ச்​சிகளில் தமிழக வெற்றிக் ழகத்​தின் சார்​பில் கட்சி​யின் தலைவர் விஜய் அதிகாரப்​பூர்​வமாக அறிவிக்​கப்​பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்​வாகிகள் தெரிவிக்​கும் கருத்துகள் மட்டுமே கழகத்​தின் கருத்து மற்றும் நிலைப்​பாடாகும்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கழகத் தலைவர் அறிவித்து, உறுப்​பினர் சேர்க்கை, மாணவர்​களுக்​குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்​கியது, வெற்றிக் கொள்​கைத் திரு​விழா, கழக ஆண்டு விழா எனத் தமிழக வெற்றி கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதர​வுடன் வளர்ந்து வருகிறது.

இதனைப் பொறுத்​துக்​கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்​களை, பத்திரி​கை​யாளர் மற்றும் ஊடகவிய​லா​ளர்கள் என்ற போர்​வை​யில், தமிழக வெற்றிக் கழகத்​தின் ஆதரவாளர்​களாகச் சித்தரித்து ஊடக விவாதங்​களில் பங்கேற்கச் செய்து, திட்​ட​மிட்ட சில விஷமக் கருத்து​களைத் திணிக்​கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மை​யாகக் கண்டிக்​கத்​தக்​கது.

ஊடக விவாதங்​களில் பங்கேற்​ப​தற்​காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவ​ரால் அல்லது அவரின் ஒப்பு​தலோடு தலைமை நிலையச் செயல​கத்​தால் அதிகாரப்​பூர்​வமாக அறிவிக்​கப்​படாதவர்​கள், ஊடக விவாதங்​களில் கலந்​து​ கொண்டு தெரிவிக்​கும் கருத்து​கள், தமிழக வெற்றிக் கழகத்​தின் அதிகாரப்​பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்​பாடோ அல்ல என்ப​தை கட்சி தலைவரின் ஒப்பு​தலோடு தெரி​விக்​கிறேன். எனவே அதிகாரப்​பூர்​வ​மற்​றவர்கள் கழகத்​தின் பெயரைப் பயன்​படுத்தி, ஊடக விவாதங்​களில் கலந்​து​கொண்டு தெரிவிக்​கும் கருத்து மற்றும் நிலைப்​பாடு​களைத் தமிழக மக்களும், கழகத் தோழர்​களும் நம்​பவோ, ஏற்றுக்​கொள்ளவோ வேண்​டாம் என்று கேட்டுக்​கொள்​கிறேன். இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE