குமரி: பளுகல் அருகே தேவிகோடு பகுதியைச் சேர்ந்தவர் அனில் (38). இவரது 2 வயது ஆண் குழந்தை ஆரோன். நேற்று முன்தினம் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஆரோன், அலமாரியில் வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, அதை ஜூஸ் என நினைத்து குடித்துள்ளான்.
ஆரோன் திடீரென வாந்தி எடுத்தபோது மண்ணெண்ணெய் குடித்தது தெரிந்தது. உடனடியாக கேரள எல்லைப் பகுதியான காரகோணத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு முதலுதவிக்குப் பின்னர் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை குழந்தை ஆரோன் இறந்தான். பளுகல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.