ஓபிஎஸ் இணைப்பு என்பது முடிந்து போன விஷயம்: மீண்டும் உறுதிப்படுத்திய கே.பி.முனுசாமி!

By KU BUREAU

அரியலூர்: ஓபிஎஸ் இணைப்பு என்பது முடிந்து போன விஷயம். அதைப் பற்றி பேச வேண்டாம் என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இருமொழிக் கொள்கை என்பது ஸ்டாலினுக்கு சொந்த மானது அல்ல. அண்ணா இருமொழி கொள்கைதான் வேண்டும் என்று அன்றைய பிரதமராக இருந்த நேருவிடம் உறுதியேற்றுக் கொண்டார். அதை அண்ணா தலைமையிலான நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு நடந்துக் கொள்கிறோம். ஓபிஎஸ் இணைப்பு என்பது முடிந்து போன விஷயம்.பத்திரிகைகளும், ஊடகங்களும் தான் அதனை பெரிதாக்குகின்றன.

அதைப் பற்றி பேச வேண்டாம். நாம் தமிழர் கட்சியிலிருந்து கட்சியினர் விலகுவது என்பது அவரது கட்சிக்குள் நடக்கின்ற விஷயம். அதில் தலையிட வேண்டிய அவசியமில்லை. தவெக தலைவர் இந்தி எதிர்ப்பில் நாடகமாடவில்லை. அரசியலில் நாடகம் ஆடுகிறார். மும்மொழி கொள்கையில் உதயநிதியும், அண்ணாமலையும் நாடகமாடுகின்றனர்.

அதிலும் குறிப்பாக ஊடகங்களில் செய்தி வர வேண்டும் என்பதற்காக வார்த்தைகளில் தடிப்பான சொற்களை பயன்படுத்தி எதிர்வினை கருத்துகளை சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றி வருகின்றனர்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE