கரூர்: குளித்தலை அருகே முதலிகவுண்டனூரைச் சேர்ந்தவர் சக்திவேல் மகன் அபிஷேக் (14). இவர், திம்மம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், பள்ளியில் நேற்று முன்தினம் இயற்கை உபாதையை கழித்துவிட்டு தாமதமாக வந்ததால், உடற்கல்வி ஆசிரியர் சரவண குமார் குச்சியால் அடித்ததாகவும், இதனால் காயமடைந்து அபிஷேக் உடல் நிலை பாதிக்கப்பட்டு பள்ளியில் முதலுதவி கொடுத்தாகவும் கூறப்படுகிறது. பள்ளி முடிந்து மாணவர் வீட்டுக்கு சென்ற நிலையில், சோர்வாக இருந்த மாணவர் பெற்றோரிடம் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர் அடித்ததாக கூறியுள்ளார்.
இதையடுத்து பெற்றோர் மாணவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும், மாணவரை தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட கல்வி அலுவலர் முருகேசன் பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்களிடம் நேற்று விசாரணை நடத்தினார். இதில் மாணவர் அபிஷேக்கை ஆசிரியர் சரவணகுமார் அடித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பகுதிநேர ஆசிரியர் சரவண குமாரை பணியில் இருந்து விடுவித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுகானந்தம் நேற்று உத்தரவிட்டார்.
» பெரியகுளம் பொதுக்கூட்டத்தில் நாளை என்ன பேச போகிறார் இபிஎஸ்? - அதிமுகவினர் எதிர்பார்ப்பு
» ‘டாஸ்மாக்கால் ஊரின் அமைதியே கெட்டுபோச்சு’: கடையை தாக்கிய பெண்கள்; கள்ளக்குறிச்சியில் மறியல்