சிவகங்கை: பட்டா மாறுதலுக்கு ரூ.5,000 லஞ்சம் வாங்கிய முன்னாள் கிராம நிர்வாக அலுவலருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே காரையூரைச் சேர்ந்தவர் பாக்கியம். இவர் கடந்த 2013 நவம்பரில் தான் வாங்கிய நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய காரையூர் கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) ராஜாவை (49) அணுகினார். அதற்கு ராஜா ரூ.5,000 லஞ்சம் கேட்டார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பாக்கியம், சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார்.
போலீஸாரின் ஆலோசனைப்படி ரசாயனப் பொடி தடவிய ரூ.5,000-த்தை கிராம நிர்வாக அலுவலர் ராஜாவிடம் பாக்கியம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராஜாவை கைது செய்தனர்.
இந்த வழக்கு சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்முரளி கிராம நிர்வாக அலுவலர் ராஜாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார்.
» சூரியனின் வெளிப்புறத்தில் ஒளிவெடிப்பு படம் பிடித்து அசத்திய ஆதித்யா விண்கலம்
» செந்தில் பாலாஜி மீதான வழக்குகளின் விசாரணை நிலவர அறிக்கையை மனுதாரர்களுக்கு வழங்க உத்தரவு