சூரியனின் வெளிப்புறத்தில் ஒளிவெடிப்பு படம் பிடித்து அசத்திய ஆதித்யா விண்கலம்

By KU BUREAU

சென்னை: சூரியனின் புறவெளி​யில் நிகழ்ந்த ஒளி வெடிப்பை ஆதித்யா விண்​கலத்​தில் உள்ள சூட் கருவி படம் பிடித்து சாதனை படைத்​துள்​ள​தாக இஸ்ரோ அறி​வித்​துள்​ளது. சூரியனின் வெளிப்​புற பகு​தியை ஆராய்​வதற்​காக இஸ்ரோ வடிவ​மைத்த ஆதித்யா எல்-1 எனும் நவீன விண்​கலம் பிஎஸ்​எல்வி சி-57 ராக்​கெட் மூலம் ஸ்ரீஹரி​கோட்​டா​வில் இருந்து 2023 செப்​.2-ம் தேதி விண்​ணில் செலுத்​தப்​பட்​டது.

இது 127 நாட்​கள் பயணித்து பூமியி​லிருந்து சுமார் 15 லட்​சம் கி.மீ தொலை​வில் உள்ள எல்-1 எனும் லெக்​ராஞ்​சி​யன் புள்​ளியை மைய​மாகக் கொண்ட சுற்​றுப் பாதை​யில் நிலைநிறுத்​தப்​பட்​டது. அங்​கிருந்​த​படியே சூரியனின் கரோ​னா, போட்​டோஸ்​பியர் மற்​றும் குரோமோஸ்​பியர் பகு​தி​களை விண்​கலம் ஆய்வு செய்து அரிய தகவல்​களை வழங்கி வரு​கிறது.

இந்​நிலை​யில், ஆதித்யா விண்​கலத்​தில் பொருத்​தப்​பட்​டுள்ள சூட் எனும் சாதனம் சூரியனின் வெளி அடுக்​கு​களில் இது​வரை அறியப்​ப​டாத ஒளி வெடிப்பு சிதறலை புகைப்​படம், வீடியோ எடுத்​துள்​ள​தாக இஸ்ரோ அறி​வித்​துள்​ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது:ஆதித்யா விண்​கலத்​தில் உள்ள சோலார் அல்ட்​ராவைலட் இமேஜிங் டெலஸ்​கோப் எனும் சூட் கரு​வி​யானது சூரியனின் போட்​டோஸ்​பியர் மற்​றும் குரோமோஸ்​பியரில் இருந்து வெளிவரும் புற ஊதா கதிர்​கள் குறித்​தும், அதன்​மூலம் ஏற்​படும் கதிர்​வீச்சு மாறு​பாடு​கள் குறித்​தும் ஆய்​வு​களை மேற்​கொள்ள அனுப்​பப்​பட்​டுள்​ளது.

அதன்​படி போட்​டோஸ்​பியர் மற்​றும் குரோமோஸ்​பியரின் படங்​களை அந்​த கருவி தொடர்ந்து எடுத்து அனுப்பி வரு​கிறது. பொது​வாக, சூரியனின் காந்​தபுலத்​தில் திடீரென ஏற்​படும் மாற்​றங்​களால் ஒளி வெடிப்பு ஏற்​பட்டு ஆற்​றல் வெளிப்​படும். இது சோலார் ஃப்​ளேர் என்று அழைக்​கப்​படும். சமீபத்​தில் அத்​தகைய ஒளி வெடிப்பு சூரியனின் கீழ் புறவெளி​யில் நிகழ்ந்​ததை சூட் கருவி படம் பிடித்​துள்​ளது. அந்த தரவு​களைக் கொண்டு ஆராய்ச்​சிகள் முன்​னெடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

இத்​தகைய ஒளி வெடிப்​பு​கள் புவி​யின் தட்​பவெப்ப நிலை​யில் தாக்​கத்தை ஏற்​படுத்​தலாம். சூரியனின் கதிர்​வீச்​சால் ஏற்​படும் பாதிப்​பு​களை தடுப்​ப​தற்கு இந்த ஆய்​வு​கள் உதவும். இதன்​மூலம் விண்​வெளி ஆய்​வில்​ பு​திய ச​காப்​
தம்​ படைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​​வாறு அ​தில்​ கூறப்​பட்​டுள்​ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE