மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்துக்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு

By KU BUREAU

மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பான தமிழக அரசின் அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக, பாஜக, தவெக, நாம் தமிழர் உட்பட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு மக்கள் தொகை அடிப்படையி்ல், மக்களவை தொகுதி மறுவரையறை பணிகளை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால், தொகுதிகள் எண்ணிக்கையை குறைந்து, மாநிலத்தின் பிரதிநிதித்துவம் குறையும் என தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், நேற்று முன்தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து, மக்களவைத் தொகுதி வரையறை தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, அனைத்து கட்சிக் கூட்டத்தை மார்ச் 5-ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்திருப்பதாகவும், பதிவு செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதையடு்த்து, 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படுவதாக அதன் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, பாமக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மதிமுக, விசிக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதித்தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக்கழகம் உள்ளி்ட்ட 45 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்சிகளுக்கான முதல்வரின் அழைப்பை இன்று முதல் அமைச்சர்கள் நேரில் சென்று தலைவர்களை சந்தித்து வழங்க உள்ளது குறி்ப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE