வேலூர்: மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாடு அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது. இந்த விஷயத்தில் நாங்கள் தனித்து போராடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "இந்தி எதிர்ப்பு என்பது திமுகவின் தேர்தல் கால ஏமாற்று நாடகம். திமுகவின் இந்த ஏமாற்று நாடகத்தை நினைவு தெரிந்த நாள் முதல் பார்த்துக் கொண்டு உள்ளோம். திமுகவினர் தேர்தலின் போது இந்தியில் பேசி ஓட்டு கேட்கின்றனர். இப்போது சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக திமுக நாடகம் நடத்துகிறது. நாம் தமிழர் கட்சி மட்டும் தான் இந்தியை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது.
மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு குறித்த தமிழ்நாடு அரசின் அனைத்து கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது. இந்த விஷயத்தில் நாங்கள் தனித்து போராடுவோம். மொழியை அழித்தால் இனம் அழிந்து விடும் என்பதால் இந்தியை திணித்து தமிழை அழிக்க பாஜக நினைக்கிறது.
நாங்கள் பிற மொழியை எதிர்த்து எங்கள் மொழியை காப்பாற்ற போராடுகிறோம். திமுக தொண்டர்களுக்கு இந்திக்கும் ஆங்கிலத்திற்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆங்கிலத்தை தார்பூசி அழிக்கின்றனர்" என்று சீமான் கூறினார்.
» பி.இ-பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: அரசாணை வெளியீடு
» முதல்வர் பற்றி அருவெறுப்பாக தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலை: முத்தரசன் கடும் கண்டனம்