பி.இ-பி.எட் முடித்தவர்கள் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியலாம்: அரசாணை வெளியீடு

By KU BUREAU

சென்னை: பிஇ பட்டத்துடன் பிஎட் முடித்தவர்கள் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிவதற்கு தகுதியானவர்கள் என்று உயா்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து உயா்கல்வித் துறைச் செயலா் கே.கோபால் வெளியிட்ட அரசாணையில், ”கொல்கத்தாவில் உள்ள மேற்கு வங்கம் தொழில் நுட்ப பல்கலைக் கழகத்தால் வழங்கப்படும் பி.டெக் எலக்ட்ரிக்கல் பொறியியல் படிப்பு வேலை வாய்ப்பு வகையில் பிஇ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் படிப்புக்குச் சமமானது.

இதேபோல், பிஇ படிப்பில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டம் பெற்றவர்கள் பிஎட் (இயற்பியல் அறிவியல்) முடித்திருந்தால் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியராக( இயற்பியல்) பணிபுரியலாம். அந்த ஆசிரியர்கள் பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை பயிற்றுவிக்க தகுதியானவர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE