மாமல்லபுரம்: தவெகவின் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் விஜய் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கெட் அவுட் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்று வருகிறது. இதில் தவெக தலைவர் விஜய், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
வழிநெடுகிலும் விஜய்க்கு தவெக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். கிடக்குழி மாரியம்மாளின் நாட்டுப்புற பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த விஜய், அங்கு வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டு, மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அந்த பேனரில் இடம்பெற்ற வாசகங்கள்: ஒருவர் பாட்டுப் பாட, மற்றொருவர் அதற்கு ஏற்ற ஒத்திசைவுடன் நடனமாட திரைமறைவு கூட்டுக் களவாணிகள் இருவரும் தமிழக மக்களின் பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்ய என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து வருகின்றனர்.
» திருப்பரங்குன்றம் கோயிலில் மார்ச் 5-ல் பங்குனி திருவிழா கொடியேற்றம்; மார்ச் 19ல் தேரோட்டம்!
» திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை: கணவன், மனைவிக்கு 20 ஆண்டு சிறை
புதிய கல்வி கொள்கை, மும்மொழி திட்ட திணிப்போடு சேர்த்து முக்கிய அவலங்களை எதிர்த்து போராட இவர்களை #GETOUT செய்திட உறுதி ஏற்போம். விமர்சனத்துக்கு அஞ்சி கொடுங்கோலுடன் மக்களின் குரல்களை ஒடுக்கும் கோழைத்தனம்” இவ்வாறு அந்த பதாகையில் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
தமிழ்நாடு முழுவதும் இருந்து 2500 தவெக நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தவெக பொதுக்குழுவில் பங்கேற்கும் நிர்வாகிகளின் செல்ஃபோன் அரங்கிற்கு வெளியிலேயே வாங்கி வைக்கப்பட்டு வருகிறது. செல்ஃபோன்கள் வாங்கப்பட்டு டோக்கன் போட்டு வைத்து வருகின்றனர். கூட்டம் முடிவடைந்த பின் டோக்கன் வழங்கிவிட்டு செல்ஃபோனை வாங்கி செல்லலாம். அரங்கில் விஜய் பேசும் போது, யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளுக்காக கமகம சைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 21 வகையான உணவுகள் தயார் செய்யப்பட்டுள்ளது.