ராணிப்பேட்டை: தமிழகத்தில் என்னை தாண்டி திராணியிருந்தால் இந்தி மொழியை திணித்து காட்டுங்கள் பார்ப்போம் என்று பாஜகவுக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவால் விடுத்துள்ளார்.
ராணிப்பேட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "மத்திய அரசுக்கு மற்ற மாநிலங்களை விட அதிகளவில் நாம் வரி செலுத்துகிறோம். ஆனாலும் நமக்கு போதிய நிதி அவர்கள் அளிக்கவில்லை என்று திமுக ஆட்சியாளர்கள் புலம்புகின்றனர். இதற்கு ஏன் அவர்களுக்கு ஆட்சி, அதிகாரம். பீகார் மாநிலத்தால் பெற முடிகிறது. உங்களால் முடியவில்லையா ?.
தமிழகத்தில் இந்தி மொழியை வலுகட்டாயமாக திணிக்கும் போக்கை பாஜக அரசு கைவிட வேண்டும். மொழி பிரச்சினைக்காக பல்வேறு போராட்டகளை சந்தித்துள்ளது தமிழகம். மற்ற மாநிலங்கள் ஏற்கிறது என்றால், நாங்களும் ஏற்க வேண்டும் என்று அவசியமில்லை. மற்ற கட்சிகளை விடுங்கள். தமிழகத்தில் பாஜக அரசு நாம் தமிழர் கட்சியை தாண்டி இந்தி மொழியை திணித்து விடுங்கள் பார்ப்போம்.
பாஜகவுடன் சேர்ந்து என் மொழியை அழித்தற்கு, திராவிட கட்சிகளுக்கும் பெறும் பங்கு உண்டு. பெரியார் குறித்து நான் அவதூறாக பேசியவில்லை. அவர் பேசியதை எடுத்து பேசுகிறேன். அவரை பற்றி இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் என் வீட்டின் மீது குண்டு போடுகிறார்கள். பேச ஆரம்பித்தால் என்னவாகும். நான் இருக்கும்போது போடுங்கள் பார்ப்போம்” என்று சீமான் தெரிவித்தார்.