புதுக்கோட்டை: தெற்கு பிச்சாந்துபட்டியைச் சேர்ந்த கபடி வீரர் சிவகணேஷ் (54). இவர் சிலம்பம் பயிற்சியாளராகவும் உள்ளார். இவர் நேற்று சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் நடைபெற்ற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் விளையாடினார்.
விளையாடிக் கொண்டிருந்தபோது கையில் காயம் ஏற்பட்டதை அடுத்து ஓய்வெடுத்தார். பின்னர், அவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் கண்டரமாணிக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.