ரூ.18 லட்சம் வீணானதா? - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன் செயல்படாத தானியங்கி குடிநீர் மையம்!

By KU BUREAU

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் முன் ரூ.18 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட தானியங்கி குடிநீர் வழங்கும் மையம், செயல்பாடு இன்றி உள்ளதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் பெரிய கோபுரம் சந்நிதி தெருவில் பக்தர்கள் தங்கும் விடுதி முன் தனியார் நிறு வனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் ரூ.18 லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு வசதியுடன் கூடிய தானியங்கி குடிநீர் வழங்கும் மையம் அமைக் கப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் திறக்கப்பட்ட இந்த மையத்தில் ஒரு லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ரூ.1-க்கு வழங்கப்பட்டு வந்தது.

இதன் மூலம் பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குக் குறைந்த விலையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைத்ததோடு, நகராட்சிக்கு வருவாயும் கிடைத்தது.தொடர் பராமரிப்பு இல்லாததால் குடிநீர் வழங்கும் மையம் இரு ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பாடு இன்றி முடங்கிவிட்டது. இதனால், பக்தர்கள். சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்: குடிநீர் சுத்திகரிப்பு மையம் செயல்படாததால் அதிக பணம் கொடுத்து கடைகளில் குடிநீர் பாட்டில்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் சுத்திகரிப்பு மையத்தைச் சீரமைத்து பயன்பாட்டுக்கு க் கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE