நெய்வேலியில் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்!

By KU BUREAU

கடலூர்: முதல்வர் ஸ்டாலின் இரு நாட்கள் சுற்றுப் பயணமாக கடலூர் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் மாலை வருகை தந்தார். தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பத்தில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். பின்னர் முதல்வர் மு.க.ஸ்டா லின் கடலூரில் இருந்து வடலூர் வழியாக நெய்வேலிக்கு சென் றார்.

நெய்வேலி என்எல்சி ஆர்ச் கேட் நுழைவு வாயிலில் சபா ராஜேந்திரன் எம்எல்ஏ தலை மையில் திமுகவினர் வரவேற் பளித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு நெய் வேலி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா திடலில் மாற்றுக் கட்சியினர் திமுக வில் இணையும் நிகழ்ச்சி நடை பெற்றது.

இதில் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடலூர் மேற்கு மாவட்டம், நெய்வேலி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந் தனர். கட்சியில் இணைந்தவர் களுக்கு முதல்வர் வாழ்த்து தெரி வித்தார். இதையடுத்து சபா ராஜேந்திரன் எம்எல்ஏ முதல்வ ருக்கு வீரவாளை பரிசாக வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பொன்முடி, கே.என். நேரு. எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சிவசங்கர் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

1,019 பெண்கள் உள்பட 5,774 பேர் மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்ததாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் முதல்வர் ஸ்டாலின் என்எல்சி விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து நேற்று காலை 9 மணி அளவில் என்எல்சி விருந்தினர் மாளிகையில் இருந்து வேப்பூர் திருப்பெயரில் நடைபெறும் 'பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாட்டிற்கு புறப்பட்டு சென்றார். அப்போது நேரு சிலை அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் வரவேற்பு அளித்தனர். அவர்களிடம் இருந்த மனுக்களை முதல்வர் பெற்றுக் கொண்டார்.

விருந்தினர் மாளிகையில் இருந்து காரில் சென்ற முதல் வருக்கு ஜவகர்லால் நேரு சிலை, பெரியார் சதுக்கம், எம்ஜிஆர் சிலை. மத்திய பேருந்து நிலையம், எட்டு ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளில் பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் தொமுச

ரவுண்டானாவில் உள்ள கருணா நிதிசிலைக்கு முதல்வர் ஸ்டா லின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது நெய்வேலி வட்டம் 30 சூப்பர் பஜார் சாலையில் ஒரு கி.மீட்டர் தூரம் நடந்து சென்று, வழிநெடுகி லும் திரண்டிருந்த மக்களை சந்தித்தார். ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் முதல்வருடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். பின்னர் வேப்பூர் செல்லும் வழியில் நெய்வேலி மந்தாரக்குப்பம் பகுதியில் வேனில் இருந்தபடியே நரிக்குறவர் தம்பதிக்கு திரு மணத்தை நடத்தி வைத்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE