குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு 

By இல.ராஜகோபால்

கோவை: குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: '2015-ம் ஆண்டின் இளைஞர்நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் விதிமுறைகளின்படி கோவை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் நலக்குழுவிற்கு ஒரு பெண் உட்பட தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட உள்ளனர். இந்த பதவி அரசு பணி அல்ல.

குழந்தை உளவியல் அல்லது மனநல மருத்துவம், சட்டம், சமூகப்பணி, சமூகவியல், மனித உடல் நலம், மனித மேம்பாடு, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். குழந்தைகளுக்கான நலப்பணிகளில் குறைந்தது 7 ஆண்டுகள் முனைப்புடன் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும். 35 வயதுக்குட்பட்டவர்களாகவும் 65 வயதைப்பூர்த்தி செய்யாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், 32, இரண்டாம் தளம், பழைய கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கோவை என்ற முகவரியிலும், https://dsdcpimms.tn.gov.in விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மார்ச் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் இயக்குநர்,குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, எண்.300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 600010 என்ற முகவரியில் கிடைக்கப் பெறுமாறு விண்ணப்பிக்க வேண்டும். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் முடிவே இறுதியானது.' இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE