மும்மொழி கொள்கையை தமிழகம் எப்போதும் எதிர்க்கும்: துணை முதல்வர் உதயநிதி திட்டவட்டம்

By KU BUREAU

சென்னை: தமிழகம் எப்போதும் மும்​மொழி கொள்​கைக்கு எதிரானது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் திட்​ட​வட்​டமாக தெரி​வித்​துள்ளார்.தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக முதல்வர் ஸ்டா​லினுக்கு, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் அனுப்​பி​யுள்​ளார்.

இதுகுறித்து சென்னை​யில் செய்தி​யாளர்​களிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லின் கூறிய​தாவது:மத்திய அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு சேரவேண்டிய நிதி உரிமை​யை​தான் கேட்டு வருகிறோம். தமிழக மாணவர்​களின் கல்விக்காக ஆண்டு​தோறும் வழங்​கப்​படும் கல்வித் தொகை​யை​தான் கேட்​கிறோம்.

ஆனால், இந்த ஆண்டில் ‘புதிய தேசிய கல்விக் கொள்​கையை, மும்​மொழி கொள்​கையை ஏற்றுக்​கொள்ள வேண்​டும்’ என கூறுகின்​றனர். தமிழகம் எப்போதுமே மும்​மொழி கொள்​கைக்கு எதிராகத்​தான் இருந்​துள்ளது. இதில் நாங்கள் என்ன அரசியல் செய்​கிறோம். மும்​மொழி கொள்​கையை எந்த காலத்​தி​லும் ஏற்க​மாட்​டோம் என்று தெளிவாக கூறி​விட்​டோம். மொழிப் போருக்காக பல உயிர்களை கொடுத்த மாநிலம் தமிழகம்.

கல்வி என்பது தமிழர்​களின் உரிமை. இதில் இருந்தே யார் அரசியல் செய்​கிறார்கள் என்பதை மக்கள் புரிந்​து​கொள்ள வேண்​டும். அண்ணாமலை பற்றி பேச ​விருப்​பம் இல்லை. இவ்​வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE