இந்தியை திணிப்பதாக அவதூறு சுமத்தி கீழ்த்தரமான அரசியல் செய்கிறது திமுக: தமிழக பாஜக கடும் விமர்சனம்

By KU BUREAU

சென்னை: இந்தியை திணிப்​பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்​களின் நலனை புறக்​கணித்து, திமுக கீழ்த்​தரமாக அரசியல் செய்​வதாக பாஜக கடுமையாக விமர்​சனம் செய்​துள்ளது.

இதுகுறித்து தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏஎன்​எஸ். பிரசாத் வெளி​யிட்​டுள்ள அறிக் கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மாணவர்​கள், இளைஞர்​களிடம் போதை கலாச்​சா​ரம், கொலை, கொள்ளை, பெண்​களுக்கு எதிரான குற்​றங்கள் என மக்கள் வாழ தகுதி​யற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது. முதல்வர் ஸ்டா​லினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டா​லினும் திமுக அரசின் மீதான மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப ‘கெட்​அவுட் மோடி’ என ஹேஷ்டேக் போட்டு விளை​யாடுகின்​றனர்.

திராவிட மாடல் தலைவர்கள் முதல், புதிதாக கட்சி தொடங்​கிய​வர்கள் வரை அனைவருமே தமிழகத்​துக்கான மாற்றம் அல்ல; ஏமாற்றம் என்பதே உண்மை. தமிழகத்​தின் அரசியல் குப்​பைகளாக செயல்​படும் இந்த கட்சிகளை, தமிழக மக்கள் தங்கள் மனதில் இருந்து அப்பு​றப்​படுத்​தி​விட்​டனர். தமிழகத்​தின் வளர்ச்​சியை வேரறுக்​கும் இந்த மக்கள் விரோத சக்தி​களுக்கு வரும் 2026 சட்டப்​பேரவை தேர்​தலில் தகுந்த பாடம் கற்பிக்க வேண்​டும்.

கட்டாய ஆட்சி மாற்றம்: இந்தியை திணிப்​பதாக பிரதமர் மோடி மீது அவதூறு சுமத்தி, தமிழக மாணவர்​களின் நலனைப் புறக்​கணித்து, கீழ்த்​தரமாக அரசியல் செய்​கின்​றனர். கலைக்​கப்பட வேண்டிய திமுக ஆட்சியை, மோடி அரசு பெருந்​தன்​மை​யுடன் காப்​பாற்றிக் கொண்​டிருக்​கிறது. திமுக​வினரே திருந்​துங்​கள். இல்லா​விட்​டால், திருத்​தப்​படு​வீர்​கள். கட்டாய ஆட்சி ​மாற்​றத்​துக்கான வழியை உரு​வாக்​காதீர்​கள். இவ்​வாறு அவர் தெரி​வித்​துள்ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE