பெங்களூரு டிராபிக் பிரச்சினையை கடவுளால் கூட தீர்க்க முடியாது: டி.கே.சிவக்குமார் பேச்சால் சர்ச்சை

By KU BUREAU

பெங்களூரு: பெங்களூரு டிராபிக் பிரச்சினையை கடவுளாகவே இருந்தாலும் ஒரு நாள் இரவில் தீர்க்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தின் டெக் சிட்டியான பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் மிக மிக அதிகம். அங்கே ட்ராபிக் ஸ்தம்பிக்கும் காரணத்தால் சிக்னல்களில் பல மணி நேரம் காத்திருக்கும் நிலை உருவாகும். காங்கிரஸ், பாஜக என ஆட்சிகள் அடிக்கடி மாறினாலும் பெங்களூரு டிராபிக் பிரச்சினை இப்போது வரை தீரவில்லை. இந்த நிலையில், பெங்களூரு டிராபிக் பிரச்சினையை கடவுளாகவே இருந்தாலும் ஒரு நாள் இரவில் தீர்க்க முடியாது என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில் சாலை கட்டுமான பயிலரங்கை தொடங்கி வைத்து பேசிய அவர், "பெங்களூரு டிராபிக் பிரச்சினையை இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மாற்ற முடியாது. கடவுளாலும் கூட அதைச் செய்ய முடியாது. சரியான திட்டமிடல் செய்யப்பட்டு சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டால் மட்டுமே அதை மாற்ற முடியும்" என்றார். அவரின் இந்த கருத்து சமூக வலை தளங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிவக்குமாரின் கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE