சிபிஎஸ்இ பள்ளியின் நிர்வாகக் குழு தலைவராக திருமாவளவன் உள்ளார்: அண்ணாமலை அதிர்ச்சி தகவல்

By KU BUREAU

சென்னை: வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் ப்ளூ ஸ்டார் செகண்டரி என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர் திருமாவளவன் தான் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘திமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு, திமுகவினரைப் போலவே இரட்டை வேடம் போடுபவர்கள் வரிசையில், அண்ணன் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

சென்னை வேளச்சேரியில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் கொண்டு செயல்படும் Blue Star Secondary School என்ற பள்ளியின் நிர்வாகக் குழு தலைவர், அண்ணன்திருமாவளவன் தான்.

அரசுப் பள்ளியில் ஏழை எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழிகள் பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?’ எனத் தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE