பெரியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் பதவிக்கான நேர்காணலுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

By KU BUREAU

சென்னை: சேலம் பெரி​யார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு நடைபெறவுள்ள நேர்​முகத் தேர்​வுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்​டும் என்று பாமக நிறு​வனர் ராமதாஸ் தெரி​வித்​துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை: துணைவேந்​தர்கள் பதவிக்​காலத்​தின் கடைசி 3 மாதங்​களில் எந்த நியமனங்​களையோ கொள்கை முடிவையோ எடுக்க கூடாது என்று பல்கலைக்​கழகங்​களுக்கு 2017-ல் தமிழக அரசு அனுப்பிய சுற்​றறிக்கை​யில் தெளிவாக அறிவுறுத்​தப்​பட்​டுள்ளது.

ஆனால், பெரியார் பல்கலைக்​கழகத் துணைவேந்தர் ஜெகநாதன் கடந்த ஆண்டு ஜூனில் ஓய்வு​பெற்று தற்போது வரும் மே 19-ம் தேதி வரை பணி நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த பதவிக்​காலம் முடிய 2 மாதங்கள் 18 நாட்கள் உள்ளன. அதற்கு முன்பாக பதிவாளர் பணிக்கு நேர்​காணல் நடத்துவது அரசின் விதிகளை மீறியது ஆகும். ஏராளமான குற்றச்சாட்டுகள் தற்போதைய துணைவேந்தர் மீது இப்போது ஏராளமான குற்​றச்​சாட்டுகள் உள்ளன. அவற்றில் சில புகார்கள் மீது காவல்​துறை வழக்கு பதிந்​துள்ளது.

இந்நிலை​யில் மீதமுள்ள புகார்கள் மீது தமது செல்​வாக்கை பயன்​படுத்தி எந்த நடவடிக்கை​யும் எடுக்​காமல் துணைவேந்தர் தடுத்து வருகிறார். துணைவேந்தர் பதவியி​லிருந்து ஓய்வு​பெற்ற பிறகு பதிவாளர் பதவி​யில் நேர்​மையான அதிகாரி நியமிக்​கப்​பட்​டால், அவர் தம் மீதான குற்​றச்​சாட்டுகள் குறித்து விசா​ரிக்கக்கூடும் என்ப​தால், தமது பதவிகாலத்​திலேயே தமக்கு விசுவாசமான ஒருவரை நியமிக்க துணைவேந்தர் நினைக்கிறார்.

​அதனால்தான் அவசர அவசரமாக நேர்​காணலை ஏற்பாடு செய்திருப்​ப​தாக​வும் குற்​றச்​சாட்டுகள் எழுந்​துள்ளன. துணைவேந்​தரின் இந்த நடவடிக்கையை தடுக்​காமல் அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? எனவே, பெரி​யார் பல்கலைக்கழக பதிவாளர் பதவிக்கு மார்ச் 1-ம் தேதி நடை பெற​விருக்​கும் நேர்​முகத் தேர்வுக்கு தமிழக அரசு தடை ​வி​திக்க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE