கோவை: நீண்ட காலம் நானும் செங்கடே்டையனும் இணைந்து கட்சிக்கு பணியாற்றி இருக்கிறோம். எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், "கொங்கு நாட்டில் உள்ளவர்கள் எல்லாம் கொங்கு நாட்டின் தங்கங்கள். நீண்ட காலம் நானும் செங்கடே்டையனும் இணைந்து கட்சிக்கு பணியாற்றி இருக்கிறோம். எதையும் எதிர்பார்க்காமல் உழைக்க கூடிய உன்னதமானவர் செங்கோட்டையன். அதிமுக கட்சி இணைய வேண்டும் என்பது அனைவரின் கருத்தாக உள்ளது. கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக ஏழு தொகுதிகளில் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டது.
தவிர 13 தொகுதிகளில் மூன்றாவது இடம் சென்றது. குறிப்பாக கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெறும் 5,000 வாக்குகள் மட்டுமே பெற்றது. மக்களும் தொண்டர்களும் எங்கள் பக்கம் தான் உள்ளனர். இடைத்தேர்தலில் கூட போட்டியிட முடியாத அச்ச உணர்வுடன் அவர்கள் உள்ளனர்.
அதிமுக இணைய வேண்டும் என்ற ஒத்த கருத்துடன் உள்ளவர்களிடம் போனில் பேசிக் கொண்டுதான் இருக்கிறேன். அதிமுகவில் இருந்து என்னிடம் பேசிக் கொண்டிருக்கின்றனர். தனிப்பட்ட ஈகோ-வை கீழே போட்டு விட்டு அம்மா ஆட்சி மலர வேண்டுமென்றால் அதிமுக இணைய வேண்டும்" என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
» திருப்பூரில் கணவன், குழந்தை கண் எதிரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: அன்புமணி கண்டனம்
» விருதுநகர் அதிர்ச்சி: பழைய குடோனில் வேதிப்பொருள் கொட்டியதால் மக்களுக்கு சுவாச கோளாறு