எட்டயபுரம் அருகே சோகம்: வயலில் அறுவடை இயந்திரம் மோதி விவசாயி உயிரிழப்பு

By KU BUREAU

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கசவன்குன்று வடக்கு தெருவைச் சேர்ந்தவர் விவசாயி கருப்பசாமி (48). இவரது தோட்டத்தில் மக்காச்சோளம் அறுவடை செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக அவர் கள்ளக்குறிச்சியில் இருந்து கதிர் அடிக்கும் இயந்திரத்தை வாடகைக்கு வரவழைத்து, அறுவடைப் பணிகளை மேற்கொண்டு வந்தார். கதிர் அடிக்கும் இயந்திரத்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் அழகுவேல் (30) என்பவர் இயக்கினார்.

நேற்று மாலை 3 மணிக்கு அறுவடையின்போது, எதிர்பாராதவிதமாக இயந்திரம் மோதியதில் கருப்பசாமி உயிரிழந்தார். எட்டயபுரம் போலீஸார் வழக்கு பதிந்து, அழகுவேலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த கருப்பசாமிக்கு, கலைச்செல்வி என்ற மனைவியும், கருத்தப்பாண்டி, ராமகமலம் ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE