தேர்தலுக்கு தயாராகிறது அதிமுக: மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு!

By KU BUREAU

சென்னை: பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டத்துக்கு அதிமுக அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக சார்பில் வெளியான அறிக்கையில், ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில், சென்னை, ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 24.2.2025 – திங்கட் கிழமை மாலை 4 மணிக்கு, ``பூத் கமிட்டி அமைப்பது; கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது; கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணியில், விளையாட்டு வீரர்களை அதிக அளவில் சேர்ப்பது’’ முதலான பணிகளை விரைந்து முடிப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE