அமைச்சர் துரைமுருகன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி: முதல்வர் நேரில் நலம் விசாரிப்பு

By KU BUREAU

சென்னை: தமிழக அமைச்சர் துரைமுருகன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

தமிழகத்தின் மூத்த அமைச்சரும், அரசியல்வாதியுமான துரைமுருகன்(86) சென்னை வீட்டில் இருந்தபோது, அவருக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சளி மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் துரைமுருகனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE