தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறி​விட்​டது: அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி விமர்சனம்

By KU BUREAU

வேலூர்: தேசிய கல்விக் கொள்​கை​யைப் பின்​பற்ற வேண்​டும் என்று நிர்ப்​பந்தம் செய்வது நியாயமற்றது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். அதிமுக இளைஞர், இளம்​பெண்கள் பாசறை சார்​பில் ‘இலக்கு 2026 – லட்சிய மாநாடு’ வேலூர் கோட்டை மைதானத்​தில் நேற்று மாலை நடைபெற்​றது.

இதில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசி​ய​தாவது: 2026 சட்டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக 234 தொகு​தி​களி​லும் வெற்றி​பெற்று, ஆட்சிஅமைக்​கும். 2008-ல் ஜெயலலிதா இளைஞர் மற்றும் இளம்​பெண்கள் பாசறையைத் தொடங்​கினார். இதன் மூலம் 30 லட்சம் இளைஞர்கள் அதிமுக​வில் இணைந்​தனர்.

அதிமுக அறிக்கை பாஜக அறிக்கை​யைப்போல இருப்​பதாக முதல்வர் ஸ்டா​லின் கூறுகிறார். அதிமுக மக்களை​யும், தொண்​டர்​களை​யும் மட்டுமே நம்பி​யுள்ள கட்சி. நாங்கள் யாரை​யும் தேடிச் செல்ல வேண்​டிய​தில்லை, எங்களைத் தேடித்​தான் மற்றவர்கள் வருவார்​கள். திமுக​தான் கூட்​ட​ணிக் கட்சிகளை நம்பி​யுள்​ளது.

கடந்த 2 மாதங்​களில் மட்டும் 107 போக்சோ வழக்​குகள் பதிவாகி​யுள்ளன. 56 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகப்​பட்​டுள்​ளனர். 2026 சட்டப்​பேர​வைத் தேர்​தலில் அதிமுக தலைமை​யில் கூட்டணி அமையும். தொண்​டர்கள் மற்றும் மக்களின் விருப்பம் நிறைவேற்​றப்​படும். தமிழகத்​துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக ஒதுக்​கீடு செய்ய வேண்​டும். தேசிய கல்விக் கொள்​கை​யைப் பின்​பற்ற வேண்​டும் என்று நிர்ப்​பந்தம் செய்வது நியாயமற்​றது.

தமிழக காவல் துறை ஏவல்துறையாக மாறி​விட்​டது. மாநிலம் முழு​வதும் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்​துள்ளது. திமுகஅரசுக்கு எதிராக விவசா​யிகள்,நெசவாளர்​கள், அரசு ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகின்​றனர். இவ்வாறு பழனிசாமி பேசினார். மாநாட்​டில், முன்​னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, குடி​யாத்தம் நகரச் செயலாளர் பழனி, மாவட்ட துணைச் செயலாளர் மூர்த்தி மற்றும் நிர்​வாகி​கள் கலந்​து​கொண்​டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE