திருப்பூர் அலகுமலையில் ஜல்லிக்கட்டு: ஆர்ப்பரித்த காளைகளை அடக்கிய வீரர்கள்

By KU BUREAU

திருப்பூர் அலகுமலையில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச் சங்கம் சார்பில் 6-ம் ஆண்டாக நடைபெற்ற இந்தப் போட்டியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், மேயர் ந.தினேஷ்குமார், வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 600 மாடுபிடி வீரா்கள், 800 காளைகள் பங்கேற்றன.

ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகளை வீரர்கள் மடக்கிப் பிடித்தனர். காளைகளைப் பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழகத்தைச் சேர்ந்த பல விஐபி-க்களின் காளைகளும் களம் கண்டன. மாடு பிடிக்கும் முயற்சியில் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னதாக, மாடுபிடி வீரா்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. கூட்டம் அதிகமானதால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஜல்லிக்கட்ப்டு போட்டியை திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த 5 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். இதையொட்டி ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE