தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை மீன் மார்க்கெட்டில் 167 கிலோ அழுகிய மீன்கள் பறிமுதல்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மீன் மார்க்கெட்டில் உள்ள கடைகளில், பட்டுக்கோட்டை மீன்வளத் துறை ஆய்வாளர்கள் வீரமணி, பிலிப்ஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் உள்ளிட்டோர் நேற்று அதிகாலை திடீர் ஆய்வு செய்தனர்.
அப்போது, 5 கடைகளில் சாப்பிட தகுதியற்று- அழுகிய நிலையில் இருந்த 167 கிலோ மீன்களைப் பறிமுதல் செய்தனர். பின்னர், அவை நகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டன.