கோவை: வ.உ.சி. பூங்கா அருகில் உள்ள நடைமேடைகளில் ஏராளமானோர் இரவு நேரங்களில் தங்கி உறங்கி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு அவ்வழியே மினி லாரியை, பின்பக்கமாக ஒட்டுநர் ஓட்டி வந்தார். எதிர்பாராத விதமாக நடைமேடையில் தூங்கி கொண்டிருந்த ஆதரவற்ற முதியவர் மீது மினி லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதையடுத்து மினி லாரியுடன் டிரைவர் தப்பினார்.
இது குறித்து பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கணபதி என்பவர் போக்குவரத்து விபத்து தடுப்புப் பிரிவு (கிழக்கு) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல் ஆய்வாளர் தங்கமணி தலைமையிலான போலீஸார் வழக்கு பதிந்து மினி லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.