செய்யாறு சிப்காட் விரிவாக்க திட்டம்: அதிகாரிகள் விரட்டியடிப்பு - நடந்தது என்ன?

By KU BUREAU

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் செய் யாறு அருகே மேல்மா கிராமம் உட்பட 9 கிராமங்களில் சிப்காட் விரி வாக்க திட்டத்துக்காக 3,200 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப் படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகளை தமிழக அரசு குண்டர் சட்டத்தில் கைது செய்தது.

இதற்கு, நாடு முழுவதும் கண்டன குரல் ஒலித்ததால் கைது நடவடிக் கையில் இருந்து தமிழக அரசு பின்வாங்கியது. இருப்பினும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்பதால், சிப்காட் விரிவாக்க திட்டம் (3-வது அலகு) நிறைவேற்றப்படும் என்பதில் பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு உறுதியாக உள்ளார். விவசாய நிலங்களை கையகப் படுத்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரி வித்து 2-வது ஆண்டாக தொடர் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட் டுள்ளனர்.

இந்நிலையில் விவசாய நிலங்களுக்கு மதிப்பீடு செய்யும் பணியை வருவாய் துறையினர் தொடங்கியுள்ளனர். விவசாய நிலத்தில் உள்ள கிணறு, தென்னை உள்ளிட்ட மரங்களின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்க திட்ட மிடப்பட்டுள்ளது. இதற்காக, சிப்காட் விரிவாக்கம் செய்யப்பட உள்ள அத்தி, இளநீர்குன்றம், நர்மாப்பள்ளம் ஆகிய கிராமங்களில் காவல் துறை யினர் பாதுகாப்புடன் அளவீடு மற்றும் மதிப்பீடு செய்யும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இதையறிந்த விவசாயிகள், எங்கள் நிலங்களில் அத்துமீறி நுழைந்துள்ளதாக கூறி, அவர்களது செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆட்சியர் உத்தரவிட்டு வந்துள்ள தாக கூறிய அதிகாரிகளிடம், ஆட்சியரை நேரிடையாக வரச் சொல் லுங்கள் என்றும், எங்களது நிலத்தை சர்வே செய்ய அனுமதிக்க மாட்டோம், எங்களது நிலத்தில் இருந்து வெளியேற வேண்டும் என விவசாயிகள் கூறினர். மேலும் விவசாயிகள் கூறும்போது, “குண்டர் சட்டத்தில் கைது செய்து எங்களை சித்திரவதை செய்துவிட்டு, எங்களது நிலத்தில் சர்வே செய்வீர்களா? என்றும், துணை ஆட்சியர் வாகனத் தில் துணை ஆட்சியர் இல்லாமல் வட்டாட்சியர் நிலையில் உள்ள நீங்கள் ஏன்? வர வேண்டும்.

துணை ஆட்சியர் என்ற பெயர் பலகையை பயன்படுத்தி ஏன்? ஏமாற்ற வேண் டும். சம்பந்தம் இல்லாதவர்கள் வந் துள்ளதாக கருதுவதால், வந்தவர் களை கட்டி வைக்க நேரிடும். கொடுக்கின்றவர்கள் இடத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கொடுக்க மறுக்கபவர்களின் நிலங்களை விட்டுவிடுங்கள். எங்கள் விவசாய நிலத்தில் இருந்து வெளியேறாவிட்டால், எங்களது போராட்டம் வேறு வடிவமாக இருக் கும்” என எச்சரித்தனர். இதை யடுத்து, மதிப்பீடு செய்ய வந்த அதிகாரிகள் வெளியேறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE