கொடைக்கானலில் மர்மமாக இறந்து கிடந்த ஆண், பெண் சடலங்கள் மீட்பு: போலீஸார் தீவிர விசாரணை

By KU BUREAU

திண்டுக்கல்: கொடைக்கானலில் நீரோடைப் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆண், பெண் சடலங்களை மீட்டு, போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே நகராட்சி சுங்கச்சாவடியை ஒட்டி வனப்பகுதி உள்ளது. அங்குள்ள நீரோடை பகுதியில் நேற்று மாலை 60 வயது மதிக்கத்தக்க ஆண், 55 வயது மதிக்கத்தக்க பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

தகவலறிந்து அங்கு சென்ற கொடைக்கானல் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடல்களை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த ஆணின் சட்டைப் பையில் ரூ.9,580 இருந்தது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE