அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு: தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஓபிஎஸ்!

By KU BUREAU

சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலை, அசோகா ஹோட்டலில் வரும் பிப்ரவரி 17ம் தேதி திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெறும்.

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த சூழலில் ஆலோசனை கூட்டத்தை ஓபிஎஸ் கூட்டியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE