கன்னியாகுமரி அதிர்ச்சி: தக்கலையில் போலீஸ் எஸ்.ஐ. தற்கொலை

By KU BUREAU

கன்னியாகுமரி: தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் அருள்ராஜ் (56). இவர், நாகர்கோவில் போக்குவரத்துக் காவல் துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு மற்றும் கால் வலியால் அவதிப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து அவர் கடந்த ஒன்றரை மாதத்துக்கு மேலாக மருத்துவ விடுப்பு எடுத்து, வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். வருகிற 19-ம் தேதி மீண்டும் அவர் பணிக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் ஸ்டீபன் அருள்ராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பிறகு பின்புறம் உள்ள தோட்டத்துக்கு சென்று அங்குள்ள பலா மரத்தில் தூக்கு போட்டுள்ளார்.

நேற்று காலை மரத்தில் கணவர் தூக்கில் தொங்குவதை பார்த்து அவரது மனைவி கதறி அழுதார். சிகிச்சைக்காக ஸ்டீபன் அருள்ராஜை தக்கலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE