தமிழக அரசு சார்பில் வாதிட உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிதாக வழக்கறிஞர்கள் நியமனம்!

By KU BUREAU

சென்னை: சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் சார்பில் ஆஜராகி வாதிட புதிதாக வழக்கறிஞர்களை நியமித்தும், ஏற்கெனவே அரசு வழக்கறிஞர்களாக பதவி வகித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு ப்ளீடர்களாக இ.வேதபகத்சிங், ஏ.என்.புருஷோத்தம், எஸ்.செந்தில் முருகன், யு.பரணிதரன், சி. ஹர்ஷராஜ் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர். கே.அஷ்வினிதேவி, ஆர். சித்தார்த், டி.கே.சரவணன், எஸ்.இந்துபாலா, ஆகியோர் கூடுதல் அரசு ப்ளீடர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சி.பாஸ்கரன், எஸ்.உதயக்குமார், ஆர்.வெங்கடேச பெருமாள் ஆகியோர் குற்றவியல் அரசு வழக்கறிஞர்களாக வும், வி.உமாகாந்த், பி.கருணா நிதி, வி.வெங்கட சேஷய்யா, சி,.கவுதமராஜ், ஏ.பாக்கியலட்சுமி, ஆர்.சசிக்குமார், இ.பி.சென்னியங்கிரி, பி.ஐஸ்வர்யா, வி.வீரமணி, ஜி.பிரசன்னா ஆகியோர் உரிமையியல் அரசு வழக்கறிஞர்களாகவும், பி.செல்வி, வரி வழக்குகளுக்கான அரசு வழக்கறிஞ ராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மதுரை கிளை: இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில், எப்.தீபக், எம்.லிங்கதுரை, சி.வெங்கடேஷ் குமார் ஆகியோர் சிறப்பு அரசு ப்ளீடர்களாகவும், எஸ்.மாதவன்,கே.மாலதி, பி.ராமநாதன் ஆகியோர் கூடுதல் அரசு ப்ளீடர்களாக வும் நியமிக்கப்பட்டுள்ளனர். கே.குணசேகரன், எஸ்.எஸ்.மனோஜ், எம்.கருணாநிதி, எஸ்.பிரகாஷ் ஆகியோர் குற்றவியல் அரசு வழக்கறிஞர்களாகவும் எஸ்.ஜெயப்பிரியா, எஸ்.வினோத், எம்.கங்காதரன், பி.பி.அகமது யாஸ்மின் பர்வீன், ஏ.ஒளிராஜா, கே.ஆர்.பதுரஸ் ஜமான் ஆகியோர் உரிமையியல் அரசு வழக்கறிஞர்களாகவும் நியமிக்கப்பட் டுள்ளனர்.

இதில் ஏற்கெனவே கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களுக்கு தற்போது சிறப்பு அரசு ப்ளீடர்களாகவும் அரசு வழக்கறிஞர்களாக பணியாற்றியவர்களுக்கு கூடுதல் அரசு ப்ளீடர்களாகவும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE