கோவையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு: பக்தர்கள் மகிழ்ச்சி

By KU BUREAU

கோவை: அவிநாசி சாலையில் கூப்பிடு விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 273 சதுர அடி கொண்ட ஓட்டு வீட்டை தனி நபர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தார்.

ஆக்கிரமிப்பு இடத்தை மீட்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பிரிவு 78-ன் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இதனிடையே, அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் உத்தரவின்படி, உதவி ஆணையர் இந்திரா முன்னிலையில் அலுவலர்கள், பணியாளர்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE