கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார் நியமனம்

By KU BUREAU

கோவை மாவட்ட ஆட்சியராக பவன்குமார் கிரியப்பனவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிவந்த கிராந்திகுமார் பாடி, தமிழக திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநராக பணியிடம் மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, சென்னையில் பொதுத் துறை இணைச் செயலராக பணியாற்றி வந்த பவன்குமார் க.கிரியப்பனவர் கோவை மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பொறியியல் பட்டதாரியான இவர், கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்தவர். 2016ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றார். இதற்கு முன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் சார் ஆட்சியர், கடலூரில் கூடுதல் ஆட்சியர், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE