குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்: ஜிகே வாசன் கோரிக்கை

By KU BUREAU

சென்னை: தமிழக அரசு மாநிலத்தில் பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க சட்டம் ஒழுங்கை முறையாக சரியாக 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் வேலூர் அருகே ஓடும் ரயிலில் ஒரு கர்பிணிப் பெண்ணை பாலியல் வன்கொடுமை க்கு ஆளாக்கியது மிகவும் கண்டிக்கதக்கது. இதை உரிய விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் சமீப காலமாக சிறுமிகள், மாணவிகள், இளம் பெண்கள் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகமாகி கொண்டே போகிறது. இதற்கு காரணம் சட்டம்-ஒழுங்கின் சீர்கேடே.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க, குற்றச் செயலில் ஈடுபடுவோரை காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எனவே தமிழக அரசு மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சரியாக முறையாக 24 மணி நேரமும் கண்காணித்து பெண்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) சார்பில் வலியுறுத்து கிறேன்” என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE