சிவகங்கை பெண் எஸ்.ஐ மீது காவல் நிலையத்தில் புகுந்து தாக்குதல்: இபிஎஸ் கடும் கண்டனம்

By KU BUREAU

சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்தியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”சிவகங்கை மாவட்டத்தில் பெண் எஸ்.ஐ. மீது காவல் நிலையத்தின் உள்ளேயே புகுந்து தாக்குதல் நடந்தியிருப்பதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டிய காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பு இல்லை என்ற நிலைக்கு சட்டம் - ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனம். குழந்தைகளுக்கு பள்ளியில் பாதுகாப்பில்லை.

பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பில்லை. மூதாட்டிகளுக்கு வசிக்கும் இடங்களில் பாதுகாப்பில்லை. காவலர்களுக்கு காவல் நிலையத்திலேயே பாதுகாப்பில்லை. இதுதான் ஸ்டாலின் மாடல் ஆட்சி. பெண்களுக்கு எதிரான குற்றம் புரிவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE