காஞ்சியில் அக்னி வீர் திட்டத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம்: 12 மாவட்டங்கள், 3 மாநிலங்களில் இருந்து இளைஞர்கள் பங்கேற்பு

By KU BUREAU

காஞ்சிபுரம்: இந்திய ராணுவத்​தில் அக்னிவீர் திட்​டத்​துக்கான ஆள் சேர்ப்பு முகாம் பிப்​.15-ம் தேதிவரை காஞ்​சிபுரத்​தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் பங்கேற்க வந்த இளைஞர்கள் தங்கு​வதற்கு இடமில்​லாமல் தவித்து வருவ​தாகத் தெரி​கிறது. சென்னை​யில் உள்ள ராணுவத்​துக்கான ஆள்சேர்ப்பு அலுவலகம் அக்னிவீர் டெக்​னிக்கல் (அனைத்து ஆயுதங்​கள்), அக்னிவீர் டிரேட்​ஸ்​மேன் 10-வது தேர்ச்சி (அனைத்து ஆயுதங்​கள்),அக்னிவீர் டிரேட்​ஸ்​மேன் 8-வது தேர்ச்சி (ஹவுஸ்​கீப்பர் & மெஸ் கீப்​பர்) (அனைத்து ஆயுதங்​கள்),சிப்​பாய் பார்மசி மற்றும் சோல்ஜர் டெக்​னிக்கல் நர்சிங் அசிஸ்​டென்ட் / நர்சிங் அசிஸ்​டென்ட் (கால்​நடை) ஆகிய பணியிடங்​களில் ஆள்சேர்ப்​புக்கான அறிவிப்பை வெளி​யிட்​டுள்​ளது.

இந்த ஆள்சேர்ப்பு பணி காஞ்​சிபுரம் மாவட்டம் அண்ணா விளை​யாட்டு அரங்​கில் பிப். 5-ம் தேதி தொடங்கி 15-ம் தேதிவரை நடைபெறுகிறது. இந்தப் பணிக்கு தமிழ்​நாட்​டின் சென்னை, காஞ்​சிபுரம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்டு, விழுப்பு​ரம், கடலூர், திரு​வண்ணாமலை உட்பட 12 மாவட்​டங்​கள், ஆந்திரப்​பிரதேசம், தெலுங்​கானா ஆகிய மாநிலங்​களில் இருந்து ஏற்கெனவே பதிவு செய்​தவர்கள் அழைக்​கப்​பட்​டுள்​ளனர். இதனால் காஞ்​சிபுரத்தை நோக்கி ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர். அதிகாலை​யிலேயே அவர்​களுக்கான ஓட்டம் முதலியவை ஆரம்​பித்து​விடு​வ​தால் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் இடத்​துக்கு வந்து அதிகாலை 12.30 மணிக்கே ஆஜராக வேண்​டும் என்று உள்ளூர் போலீ​ஸார் அறிவுறுத்து​கின்​றனர்.

ராணுவ அலுவலகம் சார்​பில் அவர்​களுக்கு வழிகாட்டு​வதற்காக எந்த ஒரு தகவல் மையமும் வெளி​யில் அமைக்​கப்​பட​வில்லை. மேலும் இந்த முகாம் நடைபெறும் இடத்​துக்​குள் யாரும் செல்​ல​முடி​யாதபடி கடுமையான பாது​காப்பு ஏற்பாடுகள் செய்​யப்​பட்​டுள்ளன. முன்​தினமே காஞ்சிபுரத்துக்கு வரும் இளைஞர்கள் தங்கு​வதற்கு இடமில்​லாமல் அவதி​யுற்று வருகின்​றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE