சென்னை: இந்தியன் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்க (ஐபிஎம்ஏ) தலைவர் கே.வி. கார்த்திக் கூறியுள்ளதாவது: மத்திய பட்ஜெட்டில் வெளியாகியுள்ள பல்வேறு அறிவிப்புகள் உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கும். அதிலும், குறிப்பாக, பம்ப்உற்பத்தியாளர்கள் இந்த அறிவிப்புகளால் பெரிதும் பயனடையும் சூழல் உருவாகியுள்ளது.
வேளாண், நீர் உள்கட்டமைப்புக்கு இந்த பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதால் பம்புகள் விற்பனை கணிசமான அளவில் அதிகரிக்கும். கிசான் கிரெடிட் கார்டுகளுக்கான கடன் வரம்பு கூடுதலாக ரூ.2 லட்சம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, வேளாண் பம்புகளுக்கான தேவையை சந்தையில் உடனடியாக அதிகரிக்கும். இதன் மூலம், விவசாயிகள் மட்டுமின்றி பம்ப் உற்பத்தியாளர்களுக்கும் நல்ல பலன் கிடைக்கும். இவ்வாறு கார்த்திக் கூறியுள்ளார்.