செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் புத்தக திருவிழா வருகிற 20ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு புத்தக திருவிழா செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துடன் தமிழ்நாடு அறிவியல் இயக்கம். செங்கை பாரதியார் மன்றம் இணைந்து நடத்த உள்ளது. புத்தக திருவிழா இந்த மாதம் 20ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை காலை 10 மணி முதல் இரவு 8.30 மணிவரை செங்கல்பட்டு. ஜி.எஸ்.டி சாலை. அலிசன் காசி மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் புத்தக அரங்குகள். கலை அரங்கம். உணவரங்கம் மற்றும் பல்வேறு ஆளுமைகள் தினந்தோறும் கலந்துகொண்டு சிறப்பான சிந்தனை அரங்கம் போன்றவற்றுடன் நடைபெற உள்ளது.
இத்திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட உள்ளன. நாள்தோறும் பகல் வேலைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்வுகளும், பல்வேறு போட்டிகளும் நடைபெறவுள்ளன.
விரைவில் புத்தகத் திருவிழா தொடங்க இருப்பதாகவும் இதற்கான அறிவிப்பை மாவட்ட நிர்வாகம் வெளியிடும் என்றும் புத்தகத் திருவிழா குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், திருவிழாவில் பங்கேற்கும் ஆளுமைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் யார் ? யார் எப்பொழுது அழைக்கப்பட வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
» திருப்பரங்குன்றம் விவகாரம்: வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜா மீது வழக்கு!
» உடனடியாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள்: திமுக அரசுக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்