திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எம்.பிரதாப் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொறுப்பேற்றார்.
தமிழ்நாடு அரசு, சமீபத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பதவி வகித்து வந்த, டாக்டர் த.பிரபுசங்கரை சென்னை பெருநகர போக்குவரத்துக்கழகத்தின் மேலாண் இயக்குநராகவும், சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் துணை செயலரான எம்.பிரதாப்பை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராகவும் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து, இன்று காலை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த எம்.பிரதாப்பை மாவட்ட உயரதிகாரிகள் பூங்கொத்து அளித்து வரவேற்றனர். பிறகு, எம்.பிரதாப் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறைப்படி பதிவேட்டில் கையெழுத்திட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் 24- வது ஆட்சியராக பொறுப்பேற்றார். தொடர்ந்து, புதிய ஆட்சியருக்கு பல்வேறு துறை அதிகாரிகள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.