தமிழகத்தில் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை

By KU BUREAU

தமிழகத்தில் இன்றுமுதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.3) முதல் 9-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

திங்கட்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை அளவுகளின்படி மலைப் பகுதிகளான கொடைக்கானலில் 8.2 டிகிரி, உதகையில் 8.6, வால்பாறையில் 10.5, குன்னூரில் 11.2, நிலப்பகுதிகளான கரூர் பரமத்தியில் 17.5, சேலத்தில் 18.4, திருத்தணியில் 18.5, திருப்பத்தூரில் 18.6, வேலூரில் 19.4 டிகிரி செல்சியஸ் குளிர் பதிவாகியுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் இல்லை.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE