யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்!

By KU BUREAU

சென்னை: பாஜக அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி, தி.மு.க மாணவர் அணி சார்பில் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒன்றிய பா.ஜ.க. அரசின் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் – 2025 திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலோடு, தலைநகர் டெல்லி, ஜந்தர் மந்தரில் கழக மாணவர் அணி சார்பில், வரும் 06.02.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.

கழக மாணவர் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர்கள் தங்களது துணை அமைப்பாளர்கள் மற்றும் மாணவர் அணியினருடன் பெருமளவில் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தை வெற்றியடைச் செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

மாணவர்களின் கல்வி உரிமை; தமிழ்நாட்டின் மாநில உரிமையை காத்திட நாம் அனைவரும் அணி திரள்வோம். யு.ஜி.சி.யின் அதிகார அத்துமீறலை முறியடிப்போம்’ என்று தெரிவித்துள்ளார்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE