பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அநீதி: மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்களை அறிவித்தது திமுக!

By KU BUREAU

சென்னை: நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த பிரதமர் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியான அறிக்கையில், ‘ஓரவஞ்சனையான நிதிப் பகிர்வு, தமிழ்நாட்டின் முக்கியத் திட்டங்கள் புறக்கணிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளுக்குப் பிறகும், எஸ்.எஸ்.ஏ. பேரிடர் மேலாண்மை ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்காதது, ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூட உச்சரிக்காதது என நிதிநிலை அறிக்கையிலும் தமிழ்நாட்டுக்கு அநீதி இழைத்த மோடி அரசைக் கண்டித்து வருகிற பிப்ரவரி 8, சனிக்கிழமை, மாலை தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கழக மாவட்டங்களின் சார்பில் "கண்டன பொதுக்கூட்டம்" நடைபெறும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE