சென்னை: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம், வரும் 7-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சித் தலைமையகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் பிப்.7-ம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமையகத்தில் நடைபெற உள்ளது. வரும் 12-ம் தேதி கட்சியின் 25-வது ஆண்டு கொடிநாள் விழாவை முன்னிட்டும், கட்சி வளர்ச்சிக்காகவும் பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.