பழநி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

By KU BUREAU

ஒட்டன்சத்திரம்: சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள பழநி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துச்சாமி (50). இவரது வீடு ஒட்டன்சத்திரத்தில் உள்ள சிக்கந்தர் நகரில் உள்ளது. முத்துச்சாமியும், அவரது மனைவி சத்யாவும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக கடந்தாண்டு 2024-ல் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது. இப்புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததை அறிந்து, நேற்று (ஜன.30) முத்துச்சாமி மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்தனர்.



இதைத் தொடர்ந்து, இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) காலை முத்துச்சாமி வீட்டிற்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் ஆய்வாளர் ரூபா கீதாராணி உள்ளிட்டோர் திடீர் சோதனை நடத்தி பல்வேறு முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE