தவெகவில் இணைகிறாரா காளியம்மாள்? - நாம் தமிழரில் சலசலப்பு; வெளியான முக்கிய தகவல்!

By KU BUREAU

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் இணைவதாக தகவல் வெளியானது. அதனை அவர் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தவெக கட்சியின் பனையூர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தற்போது வந்துள்ளார்.; அதேபோல அதிமுக ஐடி பிரிவு இணை செயலாளராக உள்ள நிர்மல் குமாரும் பனையூர் அலுவலகம் வந்துள்ளார். இவர்கள் இருவரும் தவெகவில் இணைய இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது.

அதேபோல சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் பேச்சாளர் ராஜ்மோகனும் தற்போது பனையூர் அலுவலகம் வந்துள்ளார். இந்த சூழலில் நடிகர் விஜயும் தற்போது பனையூர் வந்துள்ளார். எனவே இவர்கள் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் தான், இன்று காலை முதலே நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகியான காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை காளியம்மாள் மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. காளியம்மாள் சமீப காலமாக நாதகவில் அதிருப்தியில் உள்ளதால், இந்த தகவல் பரவியதாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE