சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் முன்னாள் விசிக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, அதிமுக ஐடி பிரிவு இணை செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் ஆகியோர் இன்று இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தவெக கட்சியின் பனையூர் அலுவலகத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் துணைப்பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தற்போது வந்துள்ளார்.; அதேபோல அதிமுக ஐடி பிரிவு இணை செயலாளராக உள்ள நிர்மல் குமாரும் பனையூர் அலுவலகம் வந்துள்ளார். இவர்கள் இருவரும் தவெகவில் இணைய இருப்பதாக இன்று காலை தகவல் வெளியானது.
அதேபோல சமூக வலைதளங்களில் பிரபலமாக அறியப்படும் பேச்சாளர் ராஜ்குமாரும் தற்போது பனையூர் அலுவலகம் வந்துள்ளார். இவர்களை வாசலில் வந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரவேற்றார். இவர் அதிகாரப்பூர்வமாக இணைந்ததற்காக அறிவிப்பு இன்னும் சற்று நேரத்தில் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.